“இந்தியா கூட்டணியின் கூட்டத்துக்கு செல்ல இயலாது; என்னுடைய முக்கியத்துவமெல்லாம்..!” – மம்தா |Mamata will not attend the INDIA bloc meeting

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமராக்க வேண்டும் என்று ஏற்கெனவே மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்திருக்கும் நிலையில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்றே நாள்களில் பிரதமர் பெயர் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில்தான் இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.

 மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

இது தொடர்பாக கொல்கத்தாவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், “ஜூன் 1-ம் தேதி நடக்கவிருக்கும் ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக இந்தியா கூட்டணியினர் முன்பே கூறியிருந்தனர். ஆனால் என்னால் அதில் பங்கேற்க முடியாது என்று அவர்களிடம் கூறிவிட்டேன். காரணம் அன்றைய தேதியில் மேற்கு வங்கத்தில் சில தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. ஒருபக்கம் புயல் நிவாரணப் பணிகள், இன்னொரு பக்கம் தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது என்னால் எப்படி அங்கு செல்ல முடியும்?

என்னுடைய முன்னுரிமை மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு தான். நான் இங்கே பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டாலும், என்னுடைய மனம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுடன் தான் இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *