திலாவரின் வீட்டை முற்றுகையிடச் சென்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், அவர்கள் அமர் ஜவான் ஜோதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ராஜ்குமார் ரோட், “மதன் திலாவரின் பேச்சால் மக்கள் பெரும் கோபம் அடைந்துள்ளனர். அவர் ராஜினாமா செய்துவிட்டு மன்னிப்பு கேட்கும் வரை நாங்கள் போராட்டத்தை விடமாட்டோம். அமைச்சர் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். இந்த விவகாரத்தை மாநில சட்டசபையிலும் எழுப்ப உள்ளோம். பிரதமரிடமும் இது குறித்து முறையிட இருக்கிறோம்.
அரசியலமைப்புச் சட்டம் எந்த மதத்தையும் யார் வேண்டுமானாலும் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை அனைவருக்கும் வழங்குகிறது. நாங்கள் எந்த மதத்தையும் எதிர்க்கவில்லை. பா.ஜ.க தலைவர்கள் மதவாத அரசியலை நிறுத்த வேண்டும். எங்கள் டி.என்.ஏ பரிசோதனையை மேற்கொள்ளும் வகையில் தலைமுடி, நகங்கள் போன்றவற்றை தபால் மூலம் அமைச்சர் திலாவருக்கு அனுப்பப் போகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எதிர்ப்பு போராட்டத்துக்கு பதிலளித்த மதன் திலாவர் தனது முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி, “பழங்குடியினர் எங்கள் சமூகத்தின் ஒரு பகுதி. அவர்கள் இந்துக்கள்தான், இந்துக்களாகவே எப்போதும் இருப்பார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88