`இரு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் மதம் மாறாமல் திருமணம் செய்வதை சட்டம் தடுக்காது!' – உ.பி நீதிமன்றம்

சிறப்புத் திருமண சட்டத்தின்கீழ் (Special Marriage Act), இரு வேறு மதத்தைச் சேர்ந்த ஆண் பெண் மதம் மாறாமல் திருமணம் செய்துகொள்ளலாம் என உத்தரப்பிரதேச மாநிலத்தின் உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

திருமணம்

இந்தியாவில் சிறப்புத் திருமணச் சட்டம் (SMA) 1954-ன்படி வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இருவர் தங்களின் மத்தை மாற்றிக்கொள்ளாமல் திருமணம் செய்துகொள்ள சட்ட அனுமதி வழங்குகிறது. இது மத நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட அன்பு சமூகத்தை ஊக்குவிப்பதுடன், இந்திய முழுவதும் இதனை சட்டப்பூர்வமாக அங்கீரிக்கரிக்கிறது.

திருமணம்

இப்படியிருக்க, மத்தியப்பிரதேசத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆணும், இந்து பெண்ணும் சிறப்பு சிறப்புத் சட்டத்தின்கீழ் தாங்கள் மதம் மாறாமல் திருமணம் செய்துகொள்ள போலீஸ் பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மே 27-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி குர்பால் சிங் அலுவாலியா, `சிறப்புத் திருமண சட்டத்தின்கீழ் இருவரின் திருமணம் பதிவுசெய்யப்பட்டாலுமே, இஸ்லாமிய தனிப்பட்ட சட்டத்தின்படி (Islamic personal law) இது செல்லாது’ என்று கூறி போலீஸ் பாதுகாப்பு தர மறுத்துவிட்டார்.

இத்தகைய சூழலில், உத்தரப்பிரதேசத்தில் இதேபோல இருவேறு மதத்தைச் சேர்ந்த ஆண் பெண், சிறப்புத் திருமண சட்டத்தின்கீழ் மதம் மாறாமல் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து தங்களுக்குப் பாதுகாப்பு கோரி தாக்கல்செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது அரசு தரப்பு, இருவரும் ஒப்பந்தத்தின் மூலம் திருமணம் செய்துகொள்வதாகவும், இது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லையெனவும் எதிர்த்தது.

திருமணம்

இருப்பினும், அரசு தரப்பின் வாதத்தை நிராகரித்த நீதிபதி ஜோத்ஸ்னா ஷர்மா, “எனது கருத்துப்படி, ஒப்பந்தம் மூலம் திருமணம் செய்வது சட்டப்படி செல்லாது. இருப்பினும், மதமாற்றம் இல்லாமல் சிறப்புத் திருமண சட்டத்தின்கீழ் திருமணம் செய்துகொள்ள நீதிமன்றத்தில் விண்ணப்பிப்பதைச் சட்டம் தடுக்காது. எனவே, மதம் மாறாமல் இருவர் திருமணம் செய்துகொள்வதை சிறப்புத் திருமண சட்டத்தின்கீழ் பதிவுசெய்யலாம்” என்று கூறினார்.

உயர் நீதிமன்றம் உத்தரவு

மேலும் நீதிமன்ற உத்தரவில், “இதில் துணை பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அதில் அவர்கள், தங்களின் சொந்த மத நம்பிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்றுவார்கள் என்றும், மதம் மாற முன்வருவதில்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர். அதோடு, தங்கள் வாழ்க்கையைப் பற்றி முடிவெடுக்கும் அளவுக்கு அவர்கள் முதிர்ச்சியடைந்தவர்கள் என்றும், சட்டப்படி திருமண உறவில் நுழையத் தீவிரமாக விரும்புகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *