தேர்தல் பிரசாரங்களிலும்கூட காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ஜ.க இடையே அனல் பறந்தது. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மறைவையொட்டி நடைபெறும் முதல் தேர்தல் என்பதாலும், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நேரடியாக விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கியதாலும் விருதுநகர் தொகுதியை வெல்லும் முனைப்பில் அ.தி.மு.க, தே.மு.தி.க-வினர் தீவிர களப்பணியாற்றினர். பிரசாரத்தின் கடைசி 3 நாள்களில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருதுநகரில் முகாமிட்டு விஜய பிரபாகரனுக்காக பிரசாரம் மேற்கொண்டது தேர்தல் களத்தை இன்னும் அனல் பற்ற வைத்தது. எனவே, தமிழகத்தின் மற்ற தொகுதிகளை காட்டிலும் விருதுநகரில் தேர்தல் போட்டி கடுமையாகவே இருக்கும் என கணிக்கப்பட்டது. இந்தநிலையில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்து அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு எண்ணிக்கை மையமான விருதுநகர் வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இறுதிவரை நடந்த Tug of war; தமிழகத்திலேயே குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற விருதுநகர் வேட்பாளர்! | Virudhunagar congress candidate manickam taqore victory update
