மத்திய கிழக்கில் நாளுக்குநாள் இந்த போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதால் இஸ்ரேல், லெபனான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை பாதுகாப்பாக இருக்க வேண்டி, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியிருக்கின்றன. குறிப்பாக லெபனான் நாட்டிலிருக்கும் தங்கள் நாட்டவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியிருக்கின்றன. இந்தநிலையில், இந்தியாவிலிருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவுக்கு செல்லும் ஏர் இந்தியா விமான சேவைகள் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இதேபோல, மற்ற சில நாடுகளும் பதற்றத்துக்குரிய நாடுகளுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிட்டிருக்கின்றன. இந்த அசாதாரண சூழல் மத்திய கிழக்கில் போர் மூளும் அச்சத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
இந்த அசாதாரணமாக போர் மேகம் சூழ்வதற்கு அடிப்படைக் காரணம் பாலஸ்தீனம்(காசா) மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்தான். ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 2023 அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர்த்தொடுத்தது. இந்தப் போரில் இதுவரை 40,000 பேர் கொல்லப்பட்டிருகின்றனர். அதில், 39,000 பேர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள். உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தும் காசா மீதான ஆக்கிரமிப்புப் போரை கைவிடாத இஸ்ரேல் `ஹமாஸை’ அழித்தொழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது’ என்றுகூறி தனது தாக்குதலை தீவிரப்படுத்திவருகிறது. மேலும், தனக்கு இடையூறாக இருக்கும் ஏனைய அமைப்புகளின் தலைவர்களையும் தனது உளவுப்பிரிவான மொசாட் மூலம் குறிவைத்துவருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விமான விபத்தில் உயிரிழந்ததற்குப் பின்னணியிலும் இஸ்ரேல்தான் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுபோன்று தனக்கு எதிரிகளாக உள்ள அனைத்து தரப்பின்மீதும் ஒரேநேரத்தில் இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்குதல் நடத்த, அந்த அனைத்து அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து இஸ்ரேல் மீது பழிக்குப்பழி தாக்குதல் நடத்தலாம் என்கிற நிலை ஏற்பட்டுளது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88