பாலஸ்தீனம், சிரியா உள்ளிட்ட அண்டை நாடுகளின் பல பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், சிரியாவில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளில் (Golan Heights) மீது வான்வழித் தாக்குதல் நேற்று நடைபெற்றது. இதில் 11 சிறுவர்கள் உயிரிழந்ததாகவும், 20 போ் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. இந்தத் தாக்குதலை லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மேற்கொண்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டிய நிலையில், அந்தக் குற்றச்சாட்டை ஹிஸ்புல்லா மறுத்திருக்கிறது.
இதற்கிடையில், அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ள கமலா ஹாரிஸ் நேற்று, இஸ்ரேலுக்கான தன் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக, இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பக கமலா ஹாரிஸ், வடக்கு இஸ்ரேலில் உள்ள மஜ்தல் ஷம்ஸ் என்ற இடத்தில் கால்பந்து மைதானத்தில் நேற்று ஹிஸ்புல்லா நடத்திய கொடூரமான தாக்குதலில் குழந்தைகள், இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அமெரிக்கா அதை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
இந்த கொடூரமான தாக்குதலை கண்டிப்பதோடு, கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த அனைவருக்காகவும் துக்கம் அனுசரிப்பதாக தெரிவித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பில் கார்டன், “இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்கு தொடர்ந்து கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது, மேலும் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அமெரிக்க துணை அதிபரின் ஆதரவு இரும்புக் கவசம் போன்றது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88