2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருடன் ஒருங்கிணைப்பு குழுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு திமுகவில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியிலான சீரமைப்புகளை தலைமைக்கு தெரிவிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024ம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது.
அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் அமைப்பு ரீதியான சீரமைப்புகளை கழகத் தலைவருக்கும் தலைமைக்கும் பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் “ஒருங்கிணைப்புக்குழு” அமைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க:
தேர்வில் குளறுபடி : யுபிஎஸ்சி தேர்வு போல நீட் தேர்வு நடைமுறையை மாற்ற மத்திய அரசு திட்டம்?
2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதிக்கு 2026 சட்டமன்ற தேர்தல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
.