உ.பி: `ஊழல் நடக்கிறது..!’ – பிப்ரவரி முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் மரணம்! | activist had gone on five other hunger strikes for 4 ex-pradhans of the village

மருத்துவப் பரிசோதனை செய்ய நாங்கள் பலமுறை முயற்சித்தோம், ஆனால் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை” என விளக்கமளித்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 4 மாதமாக உண்ணாவிரதம் இருந்த தேவ்கி நந்தன் ஷர்மாவின் உடல்நிலை செவ்வாய்கிழமை மோசமடைந்தது குறித்து அவரது குடும்பத்தினர் அதிகாரிகளுக்கு தகவலளித்தனர். அதைத் தொடர்ந்து அவர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

அவரின் மரணம் குறித்துப் பேசிய தேவ்கி நந்தன் ஷர்மாவின் மனைவி சுதா, “இத்தனை மாத உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, ​​அவர் தண்ணீர், எலுமிச்சை சாறு இதைமட்டுமே பயன்படுத்தினார். அவர் மிகவும் பலவீனமாகி, பேச முடியாமல் போனாபோதுகூட அதிகாரிகள் அவரைக் கண்டுகொள்ளவில்லை. ஜூன் 10-ம் தேதி, சில அதிகாரிகள் என் வீட்டிற்கு வந்து, உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக மிரட்டல் கடிதம் ஒன்றை ஒட்டினார்கள். சமூக சேவைக்காக எங்கள் நிலத்தைக் கூட விற்றுவிட்டார். எங்களுக்காக எதையும் அவர் விட்டு வைக்கவில்லை. இப்போது என் மகளுடன் எப்படி வாழ்வேன் என்று எனக்குத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *