உ.பி: பாஜக சரிவு; 78 தொகுதிகளில் 40,000 தொண்டர்களிடம் நேர்காணல் – சொல்லப்படும் காரணங்கள் என்னென்ன?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக என்.டி.ஏ கூட்டணி ஆட்சியமைத்தது. இந்த தேர்தலில், பா.ஜ.க-வின் கோட்டையாக கருதப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க கடுமையான சரிவைக் கண்டனது. 2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது, ​​பிரஜ், மேற்கு உ.பி., கான்பூர்-புந்தேல்கண்ட், அவத், காசி, கோரக்பூர் பகுதிகளில் குறிப்பிடத்தக்க சரிவை பாஜக கண்டிருக்கிறது.

ராகுல் காந்தி – மோடி

எனவே, இந்த தேர்தல் தோல்விக்கான காரணங்களை அறியும் நோக்கில், பா.ஜ.க, 78 மக்களவைத் தொகுதிகளில், 40 குழுக்களால் விரிவான ஆய்வு நடத்தியது. ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 500 கட்சித் தொண்டர்கள், மாநிலம் முழுவதும் சுமார் 40,000 தொண்டர்கள் நேர்காணல் செய்யப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவில் 12 முக்கிய காரணங்களைக் கண்டறிந்து, 15 பக்க அறிக்கையை ஆய்வுக் குழு சமர்ப்பித்துள்ளது.

குறிப்பாக கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உள்விவகார பிளவுகள், அரசியல் சாசனம் குறித்த பா.ஜ.க தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகள், அரசியல் சாசனம் திருத்தப்பட்டு, இடஒதுக்கீடு ஒழிக்கப்படும் என்ற எதிர்க்கட்சிகளின் பிரசாரம், போட்டித் தேர்வுதாள் கசிவும், அதைச் சுற்றியுள்ள சிக்கல்கள் கட்சியின் செயல்திறனை கணிசமாக பாதித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யோகி – மோடி – பாஜக

அரசுத் துறைகளில் ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனம் தொடர்பான சர்ச்சை, வாக்காளர் பட்டியலிலிருந்து ஏராளமான பெயர்களை பூத் லெவல் அதிகாரிகள் (பிஎல்ஓ) நீக்கியது, காவல் நிலையங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள் தொடர்பாக மாநில அரசு மீது கட்சித் தொண்டர்களிடையே வெளிப்படையான அதிருப்தி, குர்மிகள், குஷ்வாஹாக்கள், ஷக்யாக்கள் போன்ற பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் ஆதரவு இல்லாததும் பெரும் பின்னடைவு ஏற்பட காரணமாக பேசப்பட்டிருக்கிறது.

மேலும், பட்டியலின வாக்காளர்கள், குறிப்பாக பாசிஸ், வால்மீகிகள் தங்கள் ஆதரவை சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸுக்கு மாற்றியது, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் பா.ஜ.க வாக்குகளை பிரித்தது என தோல்விக்கான காரணங்கள் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது.

அகிலேஷ் – ராகுல்

1. அரசியல் சட்டத் திருத்தங்கள் மற்றும் இடஒதுக்கீடுகள் நீக்கப்படும் என்ற எதிர்க்கட்சிகளின் பிரசாரம் குறித்து பா.ஜ.க தலைவர்களின் சர்ச்சை கருத்துக்கள்.

2. போட்டித் தேர்வுதாள் கசிவு தொடர்பான சிக்கல்கள்.

3. அரசுத் துறைகளில் ஒப்பந்தப் பணியாளர்கள் பணி நியமன சர்ச்சை.

4. அரசு அதிகாரிகளின் நடத்தை குறித்து பா.ஜ.க-வினர் மத்தியில் அதிருப்தி.

5. பா.ஜ.க.வினர் மீது அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால், அடிமட்ட அளவில் ஏற்பட்ட பாதிப்பு.

6. பூத் லெவல் அதிகாரிகள் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பெயர்களை நீக்கியது.

பகுஜன் சமாஜ் கட்சி – மயாவதி

7. அவசர தொகுதிப் பங்கீடு பா.ஜ. க தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே உற்சாகத்தை குறைக்க வழிவகுத்தது.

8. காவல் நிலையங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள் தொடர்பாக மாநில அரசு மீது கட்சித் தொண்டர்களிடையே அதிருப்தி.

9. பா.ஜ.க.வில் இருந்து விலகி நிற்கும் தாக்கூர் வாக்காளர்கள்.

10. குர்மிகள், குஷ்வாஹாக்கள் மற்றும் ஷக்யாக்கள் போன்ற பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் ஆதரவு இல்லாமை.

11. பட்டியல் சாதி வாக்காளர்கள், குறிப்பாக பாசிஸ் மற்றும் வால்மீகிகள், தங்கள் ஆதரவை சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸுக்கு மாற்றியது.

12. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் முஸ்லீம் மற்றும் பிற வாக்குகளைப் பிரிக்கவில்லை. ஆனால் பா.ஜ.க-வின் வலுவான வேட்பாளர்கள் ஆதரவைக் கொண்டிருந்த வாக்குகளைப் பிரித்து வெற்றி பெற்றது.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *