`எக்கச்சக்க பிழை… மனுவைத் திருத்தி தாக்கல் செய்யுங்கள்!’ – பாஜக MP-க்கு எதிரான மனுவில் நீதிமன்றம் | Delhi high court adjourns AAP candidate petition against BJP MP over too many mistakes

புது டெல்லி மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி-யின் தேர்தல் வெற்றிக்கு எதிராக ஆம் ஆத்மி வேட்பாளர் தாக்கல் செய்த மனுவில் எக்கச்சக்க பிழைகள் இருப்பதாக ஏற்க மறுத்த டெல்லி நீதிமன்றம், மனுதாரரிடம் மனுவைத் திருத்தி மீண்டும் தாக்கல்செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறது. முன்னதாக, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புது டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜும், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியிலிருந்து சோம்நாத் பார்தியும் வேட்பாளர்களாகக் களமிறங்கினர்.

பன்சூரி ஸ்வராஜ் - சோம்நாத் பார்தி - ராஜ் குமார் ஆனந்த் பன்சூரி ஸ்வராஜ் - சோம்நாத் பார்தி - ராஜ் குமார் ஆனந்த்

பன்சூரி ஸ்வராஜ் – சோம்நாத் பார்தி – ராஜ் குமார் ஆனந்த்

இதில், பன்சூரி ஸ்வராஜ் 4,53,185 வாக்குகள் பெற்று 78,370 வாக்குகள் வித்தியாசத்தில் சோம்நாத் பார்தியை (3,74,815) வீழ்த்தி எம்.பி-யாக வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து, பன்சூரி ஸ்வராஜ், அவரின் தேர்தல் முகவர்கள் உள்ளிட்ட பலர் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக, பன்சூரி ஸ்வராஜுக்கு எதிராக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவுகள் 80, 81-ன் கீழ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் சோம்நாத் பார்தி மனு தாக்கல் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *