`எங்களுக்கான நேரம் வரும்… வட்டியும் முதலுமாக..!' – ஜாமீனில் வெளிவந்த கே.கவிதாவின் முதல் குரல்

அமலாக்கத்துறையால் சிறையிலடைக்கப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதாவை, உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி விடுத்திருக்கிறது. முன்னதாக, மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மார்ச் 15-ம் தேதி டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதாவை அமலாக்கத்துறை கைதுசெய்து திகார் சிறையில் அடைத்தது.

கே.கவிதா

அதையடுத்து, சிறையிலிருந்தபோதே ஏப்ரல் 11-ம் தேதி சிபிஐ-யும் அவரைக் கைதுசெய்து அவர்மீது வழக்கு பதிவுசெய்தது. இப்படியாகக் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக கவிதா சிறையிலிருந்த நிலையில், இவரின் ஜாமீன் நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்றம்

அப்போது, இதனை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, “அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் விசாரணையை முடித்துவிட்டதால், அவரை காவலில் வைக்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறி இரண்டு வழக்குகளிலிருந்தும் கவிதாவுக்கு ஜாமீன் வழங்கியது.

அதைத்தொடர்ந்து நேற்று மாலையே திகார் சிறையிலிருந்து கவிதா விடுவிக்கப்பட்டார். அப்போது சிறைக்கு வெளியே அவரை வரவேற்க வந்திருந்த அவரின் மகன் மற்றும் சகோதரர் கே.டி.ராமாராவிடம் கவிதா கண்ணீர் சிந்தி நெகிழ்ச்சியடைந்தார்.

மகனுடன் கே.கவிதா

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, “நாங்கள் போராளிகள், இதை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்த்துப் போராடுவோம். அவர்கள் பாரத ராஷ்டிர சமிதி மற்றும் சந்திரசேகர ராவ் அணியை உடைக்க முடியாதவையாக்கிவிட்டனர். அரசியலால்தான் சிறையிலடைக்கப்பட்டேன். நான் நிரபராதி என்று போராடி நிரூபிப்பேன்.

கே.கவிதா

நான் எந்த தவறும் செய்யவில்லை. தெலங்கானாவின் மகள் நான்… கே.சி.ஆரின் மகள் நான்… என்னால் தவறு செய்ய முடியாது. நான் பிடிவாதமானவள். என்னையும் எனது குடும்பத்தையும் இதில் சிக்கவைத்தவர்களுக்கு வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்பேன். எங்களுக்கான நேரம் வரும். மேலும், ஒரு தாயாக ஐந்தரை மாதங்கள் என் குடும்பம் மற்றும் குழந்தைகளைப் பிரிந்திருந்தது மிகவும் கடினமாக இருந்தது” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *