`எடப்பாடியை பொதுச் செயலாளர் என குறிப்பிட்டது எப்படி?’ – சர்ச்சையான பொதுக்குழு வழக்கு; நடந்தது என்ன?! What happened in court?

அதன்படி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு தேர்தல் ஆணையமும் அங்கிகரித்து இருக்கிறது.

முன்னதாக, ஓ.பி.எஸ் தான்தான் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என்று அறிவிக்கவேண்டும் என்ற வழக்கு ஒன்றில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் எங்களுக்கு உத்தரவிட்டது. அதற்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்று பெயரில் பதில் மனு தாக்கல் செய்தோம். ஆனால், மெயின் ரிட் மனுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருப்பதாக எதிர் தரப்பு ஒரு டெக்னிக்கல் தகவலை எடுத்து வைத்தது. அப்போதுதான், எதற்காக இப்படி தாக்கல் செய்தீர்கள் என்று கேள்வியை நீதிமன்றம் கேட்டது.

அப்போது நாங்கள் இரண்டு விஷயங்களை முன்வைத்தோம். அதாவது, இந்த வழக்கு தொடரப்பட்டதுபோது இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடியார், தற்போது பொதுச் செயலாளாராகிவிட்டார். இதுதொடர்பாக 23.2.2023 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஒருங்கிணைபாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று அழைப்பது அவசியமில்லை என்று 34-வது பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறது. அதன்படிதான், பதில் மனு தாக்கல் செய்தோம். இதற்கு, ‘மூல வழக்கில் குறிப்பிட்டதுபோல, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று போடுவதில் என்ன பிரச்னை’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமிஎடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அதற்கு, ‘ அப்படி போட்டால், அவரை ஒருங்கிணைப்பாளர் என்று நாங்கள் ஒப்புக்கொள்வதுபோன்று ஆகிவிடும். இருப்பினும், நீதிமன்றம் சொன்னால் அப்படி செய்ய தயாராக இருக்கிறோம்.’ என்று வாதிட்டோம். வாதி, பிரதிவாதியின் பெயர் பொறுப்புகளில் மாற்றம் வரும்போது ‘ Amendment of cause title’ அடிப்படையில், நீதிமன்ற அனுமதி பெற்று மாற்றலாம். அதற்கான மனுவை தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிகாட்டி, மனுவை தாக்கல் செய்வதாக சொன்னோம். அதை வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இதுதான் நீதிமன்றத்தில் நடந்தது. ஆனால், ஓ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தவறான தகவலை பரப்பிவிட்டார்கள். இது நீதிமன்ற அவமதிப்பாகும். பதவி இழந்த சப்- இன்ஸ்பெக்டரை எப்படி சப்- இன்ஸ்பெக்டர் என்று அழைக்க முடியாதோ, அதேபோல, ஓ.பி.எஸ்-ஸை ஒருங்கிணைப்பாளர் என்று அழைக்க முடியாது.” என்றார் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *