தன்னை ரவுடி என்று கூறியதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்திபவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் பிளாக்மெயில் செய்து வருவதாகவும், அருவருப்பான அரசியல் செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “என்னை ரவுடி என்று அண்ணாமலை கூறி இருக்கிறார். நான் ரவுடி என்று நிரூபிக்க முடியுமா? அண்ணாமலை ஐ.பி.எஸ் படித்தாரா? என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. உண்மைக்கு புறம்பாக பேசினால் என்ன வழக்கு வரும் என்று அண்ணாமலைக்கு தெரியுமா?
சட்டப் பாதுகாப்பு தெரியாமல் தலித் மீது அவதூறு பேசினால் என்ன நடக்கும் என்று தெரியுமா ? எஸ்.சி., எஸ்.டி ஆணையத்தில் புகார் கொடுத்தால் என்ன நடக்கும் தெரியுமா? எங்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. என்னை ரவுடி என்று அவதூறு பேசிய அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தால் அண்ணாமலைக்கு முன் ஜாமீன் கிடைக்குமா ? இந்த விவகாரத்தை நாடு முழுவதும் கொண்டு செல்வோம். துக்க வீட்டில் என்ன பேச வேண்டும், திருமண வீட்டில் என்ன பேச வேண்டும் என தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். இதுதான் அண்ணாமலைக்கு கடைசி எச்சரிக்கை.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி பற்றி பேசி அரைவேக்காடாக அரசியல் பண்ணும் அண்ணாமலை, இவர்கள் குறித்து வாஜ்பாய் என்ன சொன்னார் என படிக்க வேண்டும். வாஜ்பாயே மதிக்காதவர்கள் அவரை தலைவராகவே ஏற்றுக்கொள்ளாதவர்கள். ஆர்எஸ்எஸ் சங்கிகள் பேசுவதை கேட்டுக்கொண்டு வாய்க்கு வந்ததை உளருகிறார். இது அவருக்கு நல்லதில்லை.
#JUSTIN என் வழக்கின் வரலாறு அறைகுறை அண்ணாமலைக்குத் தெரியுமா?- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையின் X தள பதிவு#Selvaperunthagai #Annamalai #BJP #Congress #News18tamilnadu | https://t.co/uk2cvptedP pic.twitter.com/c9coaCPlDI
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 9, 2024
நாங்கள் வாதம் பண்ணுவதற்கு தயாராக இருக்கிறோம். அவர் வருவதற்கு தயாராக இல்லை. நான் கமலாலயம் வருவதற்கு தயாராக இருக்கிறேன். உங்களை மாதிரி கோழைகள் அல்ல. நெருப்பாற்றில் நீந்தி வந்தவர்கள். 2004 ஆம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. இந்த தீர்ப்பை படித்து இருந்தால் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்.
இதையும் படிங்க:
“காவல்துறை பாரப்பட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமை ஆற்றும்…” – ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் உறுதி
நாங்கள் மண்டியிட்டதோ, மன்னிப்பு கேட்டதா இல்லை. இதுதான் எங்கள் பரம்பரை. காங்கிரஸ் வரலாறு.” இதனிடையே, தமிழக பா.ஜ.கவின் ரவுடிகளின் 32 பக்க உளவுத்துறை அறிக்கையை காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில் 261 குற்றவாளிகள் பா.ஜ.கவில் உள்ளனர் என்றும் அவர்கள் மீது 1977 வழக்குகள் உள்ளதாக குறிப்பிட்டார்.
.