ஒவைசி பதவியேற்பின்போது `ஜெய் ஸ்ரீராம்’ என்ற பாஜக MP-க்கள்… ஒவைசியின் பதிலும் விவாதமும்!| BJP MPs chants jai shri ram while Owaisi took oath in parliament

அதையடுத்து, சபாநாயகர் முன்னிலையில் உருது மொழியில் எம்.பி-யாக பதவியேற்றுக்கொண்ட ஒவைசி, `ஜெய் பீம், ஜெய் மீம், ஜெய் தெலங்கானா, ஜெய் பாலஸ்தீன், தக்பீர் அல்லாஹு அக்பர்’ என்று கூறிவிட்டு கீழிறங்கினார். பின்னர், ஒவைசியின் இத்தகைய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, “இது அவையின் விதிகளுக்கு எதிரானது. இந்தியாவில் வாழும் அவர் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று கூறாதபோதே, அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான வேலைகளை அவர் செய்கிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தனியார் ஊடகத்திடம் கூறினார்.

இருப்பினும், தான் அவ்வாறு பேசியது குறித்து விளக்கமளித்த ஒவைசி, “மற்ற எம்.பி-க்களும் பல்வேறு விஷயங்களைச் சொல்கிறார்கள். நான், ஜெய் பீம், ஜெய் மீம், ஜெய் தெலங்கானா, ஜெய் பாலஸ்தீன் என்றுதான் கூறினேன். இது எப்படி தவறாகும்… இதில் அரசியலமைப்பு விதியை எங்கு மீறினேன். பாலஸ்தீனம் பற்றி மகாத்மா காந்தி கூறியதையும் படியுங்கள்” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *