இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. 30 கோடி ரூபாய் செலவில் ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காமல், வெறும் விளம்பரத்துக்காக, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்போம் என்று தற்போது மீண்டும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள். ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு, 110 ஆம் விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 7,200 புதிய பள்ளி வகுப்பறைகள், 16,390 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்பாடு, 1,000 புதிய பேருந்துகள், 500 மின்சாரப் பேருந்துகள் உள்ளிட்டவை, இரண்டு ஆண்டுகளாக அரைகுறை நடவடிக்கைகளோடு நிற்கின்றன. இரண்டு ஆண்டுகளில், பேருந்துகளைக் கூட வாங்காத திமுக, தற்போது விமான நிலையம் அமைக்கவிருப்பதாகக் கூறியிருப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், மூன்று ஆண்டுகளாக விளம்பர அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நிறைவேற்றச் சாத்தியமேயில்லாத அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக?” என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் தி.மு.க எம்.பி வில்சன், “தமிழக மக்களின் நலன்களை தியாகம் செய்து, அரசின் அனுமதியின்றி சுதந்திரமான, வளர்ச்சிக்கான உரிமைகளை தியாகம் செய்து, கர்நாடகாவின் மைசூர் மற்றும் ஹாசனில் உள்ள விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அப்படி தமிழக நலனுக்கு எதிராக அமைச்சர் வி.கே. சிங் எடுத்த முடிவை அண்ணாமலை ஆதரிக்கிறாரா? ஓசூருக்கு விமான நிலையம் மறுக்கப்படுவதை அண்ணாமலை ஆதரிக்கிறாரா? நமது முதலமைச்சர் ஸ்டாலின், ஓசூர் விமான நிலையத் திட்டத்தை அறிவித்ததன் மூலம் தமிழக மக்களின் உரிமைகளை நியாயமாக நிலைநாட்டியிருக்கிறார். இந்த அறிவிப்பு சுதந்திரமான, வளர்ச்சி மற்றும் கூட்டாட்சியின் அரசியலமைப்பு உரிமைகளை நிரூபிக்கிறது. இந்தச் சலுகை ஒப்பந்தம் வணிக நலன்களுக்காக ஏற்படுத்தப்பட்ட தமிழக அரசின் திட்டத்தை ஒருபோதும் பிணைக்காது என்று அண்ணாமலைக்கு சவால் விடுகிறேன். தமிழ்நாட்டுக்கு ஏதாவது மறுக்கப்பட்டால் அண்ணாமலையும் அவரின் கட்சியும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைவதையே இவையெல்லாம் உணர்த்துகின்றன. அண்ணாமலை, நீங்கள் இனி கர்நாடகாவில் வேலை செய்ய மாட்டீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!” என காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88