கடனை திருப்பிக்கேட்டவர் எரித்துக்கொலை – முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் உள்பட 3 பேருக்கு ஆயுள்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட நபரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரின் கூட்டாளிகள் சேர்ந்து எரித்து கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து விருதுநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் மூக்கையா(வயது 60). பணம் வட்டிக்கு கொடுத்துவாங்கும் தொழில் செய்து வந்தார். இவரிடம், அருப்புக்கோட்டை காளையார்கரிசல்குளத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவரான செல்வக்குமாரும்(49), அதே பகுதியை சேர்ந்த முருகன்(44) என்பவரும் அவ்வப்போது கடன் பெற்று வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டில், செல்வக்குமார், முருகன் ஆகிய இருவரும் தர வேண்டிய கடன் தொகை ரூ.2 லட்சம் எட்டியதையடுத்து பணத்தை திருப்பித்தரச்சொல்லி இருவரையும் மூக்கையா திட்டியுள்ளார்.

கடன் (சித்தரிப்பு படம்)

இதனால் ஆத்திரமடைந்த இருவரும், மூக்கையாவை கொலை செய்ய முடிவுசெய்துள்ளனர். இதையடுத்து, சோனைபாண்டி என்பவரை கூட்டாளியாக சேர்த்துக்கொண்டு மூக்கையாவிடம் நல்லவிதமாக பேசி காரியாப்பட்டி நாசர்புளியங்குளத்திற்கு அருகே உள்ள ஆலங்குளம் கண்மாய்க்கு அழைத்து வருமாறு கூறியுள்ளனர். அதன்படி, மூக்கையாவை கண்மாய்க்கு அழைத்து வந்தபின்னர், அங்குவைத்து நால்வரும் மது அருந்தியுள்ளனர். இதில் கொடுக்கல் வாங்கல் குறித்த பேச்சு எழவும் ஆத்திரமடைந்த செல்வக்குமார், மூக்கையா அணிந்திருந்த துண்டை கழுத்தை சுற்றிஇறுக்கவும், மற்ற இருவரும் செல்வக்குமாருக்கு உடந்தையாக இருந்து மூக்கையாவை துடிதுடிக்க கொலை செய்தனர். அவர் இறந்த பின்பு, மூக்கையா அணிந்திருந்த செயின், மோதிரத்தை எடுத்துக்கொண்டு வறண்ட கண்மாயில் உடலை பதுக்கி வைத்துள்ளனர்.

தொடர்ந்து, கொலை தொடர்பான போலீஸ் விசாரணையில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக காளையார் கரிசல்குளத்தை சேர்ந்த சங்கர்(28) என்பவருக்கு தகவல் சொல்லி கேனில் டீசல் வாங்கிவர கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து இரவு நேரத்தில் கண்மாய் வந்த மூவரும், பதுக்கி வைத்திருந்த மூக்கையாவின் உடலை வெளியே எடுத்து தாங்கள் கேனில் கொண்டு வந்திருந்த டீசலை உடலில் மீது ஊற்றி எரித்துள்ளனர். மறுநாள் காலையில், கண்மாயில் அடையாளம் தெரியாத நபர் எரித்து கொல்லப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ஆவியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்விசாரணையில், கண்மாயில் இறந்த நபர் மூக்கையா என்றும், கடன் பிரச்னையில் செல்வக்குமார், முருகன், சோனைபாண்டி ஆகியோர்தான் டீசல் ஊற்றி அவரை கொலை செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தீர்ப்பு

மூக்கையா இறந்தபிறகு உடலில் அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றியெடுத்த மூவரும் அந்த நகைகளை காளையார் கரிசல்குளத்தை சேர்ந்த பழியன், ரவியிடம் ஆகியோரிடம் கொடுத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மூக்கையா கொலை வழக்கில் செல்வக்குமார், முருகன், சோனைபாண்டி, சங்கர், பழியன், ரவி ஆகிய 6 பேர் மீதும் ஆவியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர். இதுதொடர்பான வழக்கு விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதி விவாதம் முடிந்த நிலையால் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில், செல்வக்குமார், முருகன், சோனைபாண்டி ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்து கூடுதல் மாவட்ட நீதிபதி ஹேமானந்தக்குமார் தீர்ப்பளித்தார். வழக்கிலிருந்து சங்கர், பழியன், ரவி ஆகிய மூவரையும் விடுவிப்பதாக நீதிபதி தன் தீர்ப்பில் கூறியிருந்தார்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *