உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் கடந்த செவ்வாய் கிழமை போலே பாபா என்ற சூரஜ் பால் சிங்கின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 121 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 80,000 கலந்துகொள்ளக்கூடிய இந்த நிகழ்ச்சியில் இரண்டரை லட்சம் பேரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதித்ததே இதற்கு கரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், இது சமூக விரோதிகளால் நடத்தப்பட்ட சதிச் செயல் என சூரஜ் பால் சிங் கூறிவருகிறார்.
போலீஸாரும், சூரஜ் பால் சிங்கின் உதவியாளர்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, கடவுளால் யாரும் அனுப்பப்பட மாட்டர்கள் என்பதை ஹத்ராஸ் சம்பவத்தின் மூலம் மக்கள் புரிந்துகொள்வார்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து குஷ்பு தனது X வலைதளப் பக்கத்தில், “ஹத்ராஸ் பேரழிவு சம்பவத்திலிருந்து மக்கள் விழித்துக்கொண்டு, `கடவுளால் அனுப்பப்பட்டவை என்று எதுவும் இல்லை’ என்பதை புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். உயர்வான சக்தியை நம்புபவர்கள் இதுபோன்ற விஷயங்களில் விழ மாட்டார்கள். அனைத்து இடங்களிலும் கடவுள் இருக்கிறார். நீங்கள் உங்களின் ஒவ்வொரு மூச்சிலும் அதை உணர்கிறீர்கள். இத்தகைய பேரழிவைக் கடவுள் அனுப்ப முடியாது.
இந்த 121 பேரும் தங்களின் கர்மாவால் உயிரிழக்கவில்லை. இவர்கள் கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்ட அப்பாவிகள். இந்த நெரிசலுக்கு காரணமானவர்கள் ஒவ்வொருவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதில், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதைப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பார்க்கும்போதுதான் உண்மையில், கடவுளால் அனுப்பப்பட்டவை என்ற வாசகம் நியாயப்படுத்தப்படும்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88