`கட்சித் தலைவரின் துரோகமே தோல்விக்கு காரணம்!’ – புதுச்சேரி பாஜக-வில் வெடித்த கோஷ்டி மோதல் | As the Puducherry BJP suffered a defeat in election, there has been a conflict within the party

கடந்த சட்டமன்றத் தேர்தலில், லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு 8,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்திற்கு வந்த என்னை தேர்தல் பணியாற்ற விடாமல் சதி செய்தார். அத்துடன், லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்டு, `என் தொகுதியில் நான் வைத்ததுதான் சட்டம்’ என்று சுயநலமாக சிந்தித்தவர் செல்வகணபதி. மேலும் பல நிர்வாகிகளை லாஸ்பேட்டை தொகுதியில் வேலை செய்ய விடாமல் தடுத்து, புதுச்சேரி எம்.பி பதவியை காங்கிரஸுக்கு தாரை வார்த்த பெருமை செல்வகணபதியையே சேரும். எனவே கட்சியின் எதிர்கால நலன் கருதி, உடனடியாக அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

பா.ஜ.க வேட்பாளர் நமச்சிவாயம்பா.ஜ.க வேட்பாளர் நமச்சிவாயம்

பா.ஜ.க வேட்பாளர் நமச்சிவாயம்

இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் தேசிய தலைமை ஆய்வு செய்ய வேண்டும். ஆயிரக்கணக்கான பழைய நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, சித்தாந்த ரீதியற்ற புதியவர்களை நியமித்துக் கொண்டு தனக்குத்தானே மாபெரும் தலைவர் என்று நினைப்பது சரியல்ல. பல்வேறு தலைவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்து,  பா.ஜ.க-வை படிப்படியாக புதுச்சேரியில் வளர்த்தார்கள். ஆனால் இன்று செல்வகணபதி அவர்கள், குறுக்கு வழியில் நியமன எம்.எல்.ஏ, ராஜ்யசபா எம்.பி, மாநில பொருளாளர், மாநில தலைவர் என்று எந்த வேலையும் செய்யாமல் கட்சி பலனை அனுபவித்து வருகிறார். அத்துடன் ஒட்டுமொத்த கட்சிக்கு துரோகம் விளைவித்த மாநில தலைவரை, உடனடியாக தேசிய தலைமை மாற்ற வேண்டும் ஒட்டுமொத்த கட்சி நிர்வாகிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *