கன்னியாகுமரியில் மோடி: `தியானம் செய்யும் போது யாராவது கேமராவை எடுத்து செல்வார்களா?’ – மம்தா பானர்ஜி|Mamata Banerjee mocks PM Modi’s meditation plans

இந்த நிலையில், மோடியின் தியான திட்டம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “ தியானம் என்பது யார் வேண்டுமானாலும் செய்யலாம்… ஆனால், யாராவது தியானம் செய்யும் போது கேமராவை எடுத்துச் செல்வார்களா… விதவிதமாக போட்டோ எடுப்பார்களா… நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வெளியாவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்புவரை, தியானம் என்ற பெயரில், ஏசி அறையில் சென்று உட்காருகிறார். மோடியின் இந்த செயல் குறித்து எந்தக் கட்சியும் ஏன் எதுவும் சொல்லவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. இது எனக்கு வருத்தமாக இருக்கிறது.

மம்தா பானர்ஜிமம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

ஒரு நோக்கத்திற்காக பரமாத்மாவால் அனுப்பப்பட்ட கடவுள் எனக் கூறிக்கொள்பவர், ஏன் தியானம் செய்யவேண்டும். மற்றவர்கள்தானே அவருக்காகத் தியானம் செய்வார்கள்… கன்னியாகுமரியில் மோடியின் தியானத்தைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால், அது தேர்தல் நடத்தை விதி மீறல். தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்வேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *