கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், “`உள்துறையை கவனிப்பவன் என்ற முறையில் முதலமைச்சர் என்ற முறையில் பொறுப்புடன் பதில் கூறி வருகிறேன்’ என்று சட்டசபையில் வியாக்கியானம் பேசும் முதல்வர் இன்னும் நேரடியாக கள்ளச்சாராய பாதிப்புகளில் உயிரிழந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்காமல் பாசாங்கு செய்வது நியாயமா?
கள்ளச்சாராயத்தால் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் முன் எப்பொழுதும் நடந்திராத வகையில் ஒரு மிகப்பெரிய கோர உயிர்பலி தமிழகத்தில் நடந்திருக்கிறது என்பதை இன்னமும் உணர்ந்து கொள்ளாமல் தமிழக முதல்வர் பேசுவது, நடந்து கொள்வது, இதற்கு உயிர் முன்பு நடந்த கள்ளச்சாராய சாவுகளையும் விசாரணைகளையும் ஒப்பிட்டு பேசுவது வருத்தம் அளிக்கிறது.
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று முதல்வர் நீலிக்கண்ணீர் விடுகிறார். கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணங்கள் வழங்கப்படும் என்று சொல்லி , அந்த மக்களுக்கான நிரந்தர தீர்வுகள் குறித்து பேசாமல் ஆசை வார்த்தைகளை கூறி பிரச்னைகளிலிருந்து தப்பிக்க பார்ப்பது நியாயமா?
`புதுச்சேரியில் இருந்து மெத்தனால் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்களை விரைவில் கைது செய்வோம். விழுப்புரம் திருச்சி சேலம் செங்கல்பட்டில் இருந்து 37 மருத்துவர்கள் செவிலியர்கள் கள்ளக்குறிச்சியில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். உயிர் காக்க மருந்துகள் நிலுவையில் உள்ளது. தேவைப்பட்டால் வெளிமார்க்கெட்டில் இருந்து மருந்துகள் கொள்முதல் செய்து சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்’ என்று என்று நடந்து முடிந்த படுகோரமான உயிர் உயிர் பலிகளின் கொடுமை புரியாமல் சட்டசபையில் பெரும் சாதனை செய்தது போல் பதில் அளிப்பது நியாயமா?
`கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக இரண்டு நாளில் அறிக்கை கேட்டுள்ளேன். சிபிசிஐடி விசாரணை வேகமாக நடந்து வருகிறது. குற்றவாளிகள் தப்ப முடியாது’ என சட்டசபையில் தன்நிலை விளக்கம் தருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
நடந்து முடிந்த கோர சம்பவங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று, மனிதாபிமான முறையில் அனைத்திற்கும் தீர்வு கண்டு, அதே நேரத்தில் முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் பொழுது தன்னுடைய பேச்சாலும் செயலாலும் எதிர்காலத்தில் எந்த குடும்பத்திலும் கள்ளச்சாராயத்தால் குடும்பத் தலைவர் இறந்து போகாமல் நான் பார்த்துக் கொள்வேன்… ஒவ்வொரு வீட்டிலும் இளைஞர்கள் வாழ்வு சீர்கேடாமல் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வேன்” என்ற முதல்வரின் உத்தரவாதம் தான் தற்போது கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அருமருந்து.
ஒரு சிலர் இதை சாதாரண குடிகாரர்களின் பிரச்னையாக கருதுகின்றனர். உழைக்கும் ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வியல் பிரச்னை, உரிமை பிரச்னை என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஏழை மது பிரியர்களின் உணர்வுகளுக்கும் தமிழக அரசு டாஸ்மாக் நிர்வாகம் செவி சாய்க்க வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்தில் பெரு நகரங்களில் படிப்படியாக டாஸ்மார்க் மதுக்கடைகளை குறைப்பதற்கான முயற்சி எடுக்க வேண்டும்.
மேலும் இந்த சூழ்நிலையில் கள்ளச்சாராய த்தை தடுப்பதற்கு உறுதியாக நடவடிக்கை எடுக்க தவறினால் எதிர்காலத்தில் எல்லா மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம், போதை மாத்திரை, கஞ்சா பொட்டலங்களின் சங்கமமாக மாறி கொரோனா வேகத்தில் பல ஆயிரம் உயிர்களை இழக்க கூடிய சூழ்நிலை உருவாகும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
சட்டமன்றம் கூடும் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதியை அறிவித்ததால்… சட்டமன்ற கூட்டத்தை முன்கூட்டியே நடத்துகிறது திராவிட மாடல் அரசு.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு கொடுக்கிற மரியாதையை…
கள்ளத்தனமாய் விற்கிற கள்ளச்சாராயத்தை அருந்தி உயிரிழந்த அப்பாவி உயிர்களுக்கு அளிக்க கூடாதா!
சட்டமன்றத்தை ஒத்தி வையுங்கள் முதல்வரே…
கருணை இருந்தால் கருணாபுரம் சென்று மக்கள் மன்றத்தில் அந்த அபலைகளை சந்தியுங்கள் முதல்வரே!’ என கூறியுள்ளார்
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88