மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வெளியிட்டார்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது. இந்த நாணயத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 7 மணியளவில் நடைபெற்றது.
இதையும் படிங்க : வயநாடு நிலச்சரிவு கோரம் : அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!
இந்நிலையில் மாலை சென்னை வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன்படி கருணாநிதி நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
#JUSTIN கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்
#KalaignarCoin #Karunanidhi #MKStalin #Duraimurugan #RajnathSingh #News18TamilNadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/DdTH3NVH9V
— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 18, 2024
இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய பிரமுகராக கலந்துகொண்டு கருணாநிதியின் நுாற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதனை முதலமைச்சர் மு.க.ஸடாலின் பெற்றுக்கொண்டார்.
.