கள்ளச்சாராய மரணங்களுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக போராட்டம் நடத்த உள்ள நிலையில், கள்ளக்குறிச்சி ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார்
கள்ளச்சாராய மரணங்களை திமுக அரசு தடுக்க தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டி, திங்கட்கிழமையன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய் மாவட்டங்களில் அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் நடக்கும் போராட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பார் என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடக்கும் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
ஊமத்தங்காய் கலந்து சாராய விற்பனை… சிபிசிஐடிக்கு பறந்த போன் கால்… அதிமுக நிர்வாகி அதிரடி கைது!
கோவையில் எஸ்.பி.வேலுமணி, மதுரையில் செல்லூர் ராஜூ மற்றும் ஆர்.பி.உதயகுமாரும் என முக்கிய நிர்வாகிகள் அனைவரும் போராட்டத்திற்கு தலைமையேற்க உள்ளதாகவும் அதிமுக தலைமை குறிப்பிட்டுள்ளது.
.
- First Published :