கள்ளச்சாராய விவகாரம்: `முழு விசாரணையையும் சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்!’ – நிர்மலா சீதாராமன்| I demand that kallakurichi illicit liqour matter be given to the CBI for investigation, says Nirmala Sitharaman

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில் கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டிருந்ததே காரணம் எனத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, கள்ளச்சாராய வியாபாரி உள்ளிட்ட பலரை போலீஸார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்

மேலும், இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரை பணியிட மாற்றம் மற்றும் சஸ்பெண்ட் செய்த முதல்வர் ஸ்டாலின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனிநபர் குழு ஒன்றையும் அமைத்தார். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தின் முழு விசாரணையையும் சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *