கழுகார்: `புலம்பும் மாஜி அண்ணனின் விழுதுகள் டு கம்பெனி கொடுத்த அறிக்கை; அச்சத்தில் மாண்புமிகுக்கள்’ | kazhugar updates on former minister issue and current politics

‘நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சி வேட்பாளரை, தமிழ்நாட்டிலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்திருக்கிறோம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் கணிசமான ஸ்வீட் பாக்ஸுகளை இறக்கியிருக்கிறோம். எனவே, இழந்த மாண்புமிகு பதவி மீண்டும் நமக்கே கிடைத்துவிடும்’ என்று மிகுந்த நம்பிக்கையில் இருந்தாராம் அந்த மாஜி. ஆனால், சென்னையில் சமீபத்தில் நடந்த தேசியக் கட்சித் தலைவர் கொலையோடு தொடர்புடைய கூலிப்படையினர் மற்றும் அவர்களின் உறவினர் நடத்திய நிகழ்ச்சிகளில் ஏற்கெனவே அந்த மாஜி எடுத்துக்கொண்ட புகைப்படங்களெல்லாம் சமூக வலைதளத்தில் வெளியாகி, சூழலையே மாற்றிப்போட்டுவிட்டது. புகைப்பட விவகாரங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட எதிர்க்கட்சிகள், “கொலைக்கும் ஆளும் தரப்புக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. இதையும் விசாரிக்க வேண்டும்” எனக் களமாடத் தொடங்கிவிட்டன. இதனால், அதிர்ந்துபோன மாஜி, ‘எங்கே தன்னுடைய மாண்புமிகு கனவுக்கும் பாதகம் வந்துவிடுமோ…’ என்ற பயத்தில் இருக்கிறாராம். “அண்ணனின் ஆசையில் இப்படி மண்ணள்ளிப் போட்டுட்டாங்களே…” என்று புலம்புகிறார்கள் விழுதுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *