கொங்குத் தொகுதியில், `அந்தத் தலைவர் தோற்றதுக்குக் காரணம் கட்சியின் சீனியர் பெண் நிர்வாகிதான்’ என வதந்தியைப் பரப்பியிருக்கிறார்கள் வார் ரூம் நிர்வாகிகள். “அண்ணன் ஜெயிக்கிறது அவங்களுக்குப் பிடிக்கலை. அதனாலதான், தேர்தல்ல எந்த வேலையும் செய்யாம அவர் தரப்பு ஒதுங்கிடுச்சு” என அந்தப் பெண் நிர்வாகி பற்றிச் சகட்டுமேனிக்கு சமூக வலைதளங்களில் விமர்சித்திருக்கிறார்கள். பொங்கி எழுந்த அந்தப் பெண் நிர்வாகி, `அந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், தனது தொகுதியில்தான் அவருக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன’ என்ற புள்ளிவிவரத்தை எடுத்து, அதில் தன்மீது பரப்பப்பட்ட அவதூறு தகவல்களையும் இணைத்து டெல்லிக்கு புகாராக அனுப்பியிருக்கிறாராம். அந்தப் புகாரில், ‘தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச வெற்றி வாய்ப்பையும் தன் வாயால் கெடுத்துவிட்டார் அவர்’ என்ற தகவலையும் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறாராம். “ஏற்கெனவே முன்னாள் பெண் தலைவர், சீனியர் பெண் அமைச்சர் ஆகியோரைப் பகைத்துக்கொண்ட இவர், இப்போது இந்தப் பெண் நிர்வாகியோடும் வம்பு வளர்க்கிறாரே?” எனப் பொங்குகிறார்கள் கமலாலய சீனியர்கள்.
கழுகார்: வார் ரூமுக்கு எதிராக பொங்கியெழுந்த பெண் நிர்வாகி முதல் இரண்டு மாங்காய் அடித்த பொன்முடி வரை | kazhugar updates on ponmudy, masthan issue
![](https://thanthinews.com/wp-content/uploads/2024/06/vikatan2F2024-062F557fd5b3-b968-4775-a718-26f4cb90da092FWhatsApp_Image_2024_06_13_at_11_58_22.jpeg)