அமேதி தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தொகுதி பட்டியலுக்குக் கீழ் கொண்டு வரும் நெருக்கடி கிஷோரி லால் சர்மாவுக்கு இருந்தது. இந்த நெருக்கடியையும் கடந்து, 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வின் அமைச்சர் ஸ்மிருதி இரானியை விட 1.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கிஷோரி லால் முன்னிலை வகிப்பது, அவரின் வெற்றியை உறுதி செய்துவிட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிஷோரி லால் சர்மா, “இது காந்தியின் குடும்பம் மற்றும் அமேதி மக்களின் வெற்றி” எனத் தெரிவித்திருக்கிறார்.