நீங்கள் (காங்கிரஸ்) வாக்கு வாங்கியதிலோ, நீங்கள் தற்காலிகமாக வெற்றிபெற்றதிலோ எங்களுக்கு எந்த வேதனையும் இல்லை. அதில் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் பா.ஜ.க வென்றதுதான் வேதனையாக உள்ளது. நாங்களும், நீங்களும் சிந்திக்க வேண்டிய விஷயம் பா.ஜ.க ஒரு தொகுதியில் வென்றது எப்படி என்பதைப்பற்றிதான். பெரிய வெற்றியை அடைந்த காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப்-க்கு வாக்கு சதவிகிதம் குறைந்தது எப்படி என ஆராய்ந்துபாருங்கள். வெற்றி கிடைத்துவிட்டது என அதிக அகங்காரம் கொள்ள வேண்டாம். பல இடங்களிலும் உங்களுக்கு ஆதரவளித்த சக்திகள் (சிறுபான்மையினர்) திருச்சூரில் உங்களுடன் நிற்கவில்லை.
தோல்விக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். நாங்கள் எப்போதும் மக்களுடன் இருப்போம். இது இறுதி தோல்வி அல்ல” என்றார். இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன், “எங்களுக்கு வாக்குகள் குறைந்தது பற்றி விசாரிப்போம். கல்யாசேரியிலும், மட்டனூரிலும் வாக்குகள் குறைந்ததும், திருச்சூரில் அந்திக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.எம் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு சென்றது குறித்தும் முதல்வர் விசாரணை நடத்த வேண்டும்” என்றார் பதிலுக்கு.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88