“கார்த்தி சிதம்பரம் திருந்துவார் என்று நினைத்தேன், ஆனால்..!” – கடுகடுத்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடி கேரளத்துக்கு நேரில் சென்று நிவாரண பணிகளை ஆய்வு செய்வதுடன், அந்த மாநிலத்துக்கு தேவையான அனைத்து நிதி உதவிகளையும் செய்ய வேண்டும். சுயநலம் பாராமல் நாட்டை எப்படி ஆளவேண்டும் என்பதை முதல்வர் ஸ்டாலினை பார்த்து பின்பற்ற வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் செய்ய வேண்டும். கார்த்தி சிதம்பரம் கட்சி வளர்ச்சி குறித்து பேசியதாக சொல்கிறார். அப்படியானால் மோடி நல்ல தலைவர் என்று சொன்னது காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி உகந்ததா? கார்த்தி சிதம்பரம் திருந்துவார் என்று நினைத்தேன். ஆனால், அவர் தொடர்ச்சியாக இதுபோன்று பேசியதால்தான் வேறுவழியின்றி எனது கருத்தை பத்திரிகையாளரிடம் தெரிவித்தேன்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் – கார்த்தி சிதம்பரம்

தமிழக அரசு கள்ளுக் கடைகளை திறக்க வேண்டும். கள்ளுக் கடைகளை திறந்தால் ஓரளவு கள்ளச் சாராயம் ஓழிக்கப்படும். இதன்மூலம் விவசாயிகளுக்கு வருமானம் பெருகும். இது எனது தனிப்பட்ட கருத்து. தமிழக முதல்வரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் இதுகுறித்து வலியுறுத்துவேன்” என்றார்.

தேர்தல் நேரத்தில் மோடியையும், ராகுல் காந்தியையும் ஒப்பிட்டு பேசியது, அண்மையில் கள்ளச்சாராயம் மற்றும் என்கவுன்ட்டர் குறித்து தி.மு.க.வை விமர்சித்து பேசியது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்தது. இந்நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டியில் பேசிய கருத்துகள் காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *