காவிரி நீர் ஒழுங்காற்று குழு, தமிழ்நாட்டுக்கு ஜூலை 12 முதல் 31 வரை தினமும் ஒரு டி.எம்.சி (11,500 கன அடி) தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், கர்நாடக காங்கிரஸ் அரசோ 8,000 கன அடி தண்ணீரை மட்டுமே திறந்துவிடுவோம் என்று கூறிவருகிறது. இந்நிலையில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டத்தை கூட்டுகிறது.
இந்த நிலையில், காவிரிப் பிரச்னையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிடவேண்டும் என விசிக தலைவரும், எம்.பி-யுமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியிருக்கிறார்.
இதுகுறித்த அறிக்கையில், “காவிரி நதிநீர்ப் பிரச்னையில் கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு விரோதமாக தொடர்ந்து நடந்து கொள்வது இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான உறவை சீர்செய்ய முடியாத அளவுக்குப் பாழாக்கிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்ட பிறகும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுப்பது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல. கடந்த ஆண்டும் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய தண்ணீரில் பாதியைக்கூட கர்நாடகம் அளிக்கவில்லை.