“எப்பேற்பட்ட பிரச்னையாக இருந்தாலும் பேசி தீர்க்கப்படும்” என கர்நாடக மாநில உணவுத்துறை அமைச்சர் முனியப்பா பேசியுள்ளார்.
இன்று மதுரை வருகை தந்த கர்நாடக உணவுத்துறை அமைச்சர் கே.எச்.முனியப்பா, குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக கோயிலுக்கு வருகை தந்த அமைச்சர் முனியப்பாவுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மதுரை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.
சாமி தரிசனம் செய்த அமைச்சர் முனியப்பா, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
தமிழகத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆதரவுடன் பெரும் வெற்றி வாய்ப்பு உள்ளது. இந்திய அரசியலில் இளம் தலைவராக ராகுல் காந்தி உள்ளார். மக்கள் ராகுல் காந்தியை தான் விரும்புகிறார்கள்.
காவிரி விவகாரத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. தமிழகமும், கர்நாடகமும் சகோதர்களாக உள்ளனர். எப்பேற்பட்ட பிரச்னையாக இருந்தாலும் அது பேசி தீர்க்கப்படும்” என்றார்.
அமைச்சருடன் வந்த மதுரை காங்கிரஸ் கட்சியினர் செல்போனுடன் சென்றதால், கோயில் பாதுகாப்பில் உள்ள காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb