உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார் ஜெயின், ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவின்மீது இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே 90 நாள்கள் சிறை தண்டனை அனுபவித்திருப்பதாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற காரணங்களை கருத்தில் கொண்டும் அவருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டு ஜாமீன் வழங்கியிருக்கிறார்.
டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ கடந்த சனிக்கிழமை டெல்லி நீதிமன்றத்தில், “டெல்லி கலால் கொள்கை உருவாக்கி செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்துவிட்டது. ஆனால், கெஜ்ரிவால் மட்டும் இன்னும் விசாரிக்கப்பட வேண்டும். அது மட்டும் இன்னும் முடிக்கப்படவில்லை” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது. எனவே, அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த பி.எம்.எல்.ஏ வழக்கில்தான், உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் சி.பி.ஐ தொடர்ந்த வழக்கிலும் கெஜ்ரிவால் காவலில் இருப்பதால், அவர் சிறையில்தான் இருப்பார் என்கிறது டெல்லை திகார் சிறை வட்டாரம்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88