ஜார்ஜ் குரியனின் மனைவி ஓ.டி.அன்னம்மாள் ராணுவத்தில் லெப்டினண்ட் கர்னலாக பணி செய்து ஓய்வு பெற்றவராவார். இவர்களுக்கு ஆதர்ஸ், ஆகாஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். ஜார்ஜ் குரியன் இளைஞராக இருக்கும்போதே அவரை பா.ஜ.க-வில் இருந்து விலகும்படி உறவினர்கள் பலரும் அட்வைஸ் செய்துள்ளனர். ஆனால், அவர் பா.ஜ.க-வில் தீவிரமாக செயல்பட்டார். எந்த விவாதங்களுக்கும் இடமளிக்காமல் கொடுத்த பணிகளை செவ்வனே செய்துவந்துள்ளார். இதையடுத்து இப்போது மத்திய இணை அமைச்சராக உயர்ந்துள்ளார்.
இது குறித்து மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் கூறுகையில், “நான் அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. என்னை சில இடங்களுக்குச் செல்லும்படி கூறினார்கள். அங்கு சில குறிப்புகள் கிடைத்தன. ஆரம்பத்தில் என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை, இறுதியில் பிரதமர் அலுவலகத்துக்குச் செல்லும்படி கூறினார்கள். அதன் பிறகுதான் என்ன நடக்கிறது என என்னால் யூகிக்க முடிந்தது. அதைத் தொடர்ந்து மீடியாக்களில் எனது போட்டோவுடன் செய்தி வந்த பிறகுதான் மத்திய அமைச்சர் என்ற உறுதி கிடைத்தது. வளர்ச்சிக்காகவும், அனைத்து சமூகத்தையும் ஒன்றாகப் பாவித்து செயல்படுவேன்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb