கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்த சூழலில், நேற்று இரவு தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் நேற்று நுங்கம்பாக்கம், அண்ணா நகர், தண்டையார் பேட்டை, அம்பத்தூர், கொளத்தூர், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.
இதேபோல சிவகங்கையில் ஒரு மணிநேரத்துக்கு ஆலங்கட்டி மழை பெய்தது. சாலையில் விழுந்த ஐஸ்-கட்டிகளை பொதுமக்கள் எடுத்துச் சென்றனர். இதேபோல் மானாமதுரை பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது.
இதையும் படிக்க:
பகுஜன் சமாஜ்வாதி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்தது எப்படி? பகீர் தகவல்
மதுரை மாநகர் பகுதிகளான அண்ணா நகர், கே.கே. நகர், தெப்பக்குளம், கோரிப்பாளையம், அண்ணா பேருந்து நிலையம், சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம் என பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதேபோன்று புதுக்கோட்டை நகர பகுதியில் காற்றுடன் அடைமழை கொட்டி தீர்த்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பள்ளி கல்லூரிகளில் இருந்து வீடு திரும்பிய மாணவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
.