கோவில்பட்டி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது புதிய பேருந்து நிலையம். கடந்த 2006-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு ரூ.1.80 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 16.07.2007 தி.மு.க ஆட்சியில் அப்போதைய துனை முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், கோவை, திருச்சி, சென்னை என புற நகர்களுக்குச் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து புறப்படும் வகையில் மொத்தம் 52 பேருந்துகள் நிறுத்தப்படும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது.
இது குறித்து கோவில்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஜெயபிரகாஷ் நாராயணசாமியிடம் பேசினோம், “தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக பெரிய ஊர் கோவில்பட்டி. விரைவில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளதாகப் பேசப்படுகிறது. இந்த பேருந்து நிலைய கட்டடம், கோவில்பட்டி நகராட்சிக்குச் சொந்தமான இடம் என்றாலும், இனாம் மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்டது.