இந்தச் சூழலில்தான், ‘வரும் மானியக் கோரிக்கை விவாதக் கூட்டத்தொடரில் அவர் கலந்துகொள்வாரா..?’ என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. கூட்டத்தொடரில் கலந்துகொண்டால், எடப்பாடிக்குப் பின்வரிசையில் அமர நேரிடும். அதை ஓ.பி.எஸ் விரும்பவில்லை. அதனால், சபைக்கு வந்து வருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டுவிட்டு புறப்பட்டுவிடும் எண்ணத்தில் இருந்தார் ஓ.பி.எஸ். ஆனால், ‘சபைக்குள்ளேயே நீங்க வரலைனா, அதையே பெரிய விமர்சனமாக எடப்பாடி ஆளுங்க வெச்சிருவாங்க. கூட்டத்தொடரில் கலந்துகிட்டு, மக்கள் பிரச்னையைப் பேசுனாத்தான் எடுபடும்’ என வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் போன்றவர்கள் ஆலோசனை அளித்திருக்கிறார்கள். தவிர, ‘எடப்பாடி கேட்கத் தவறும் மக்கள் பிரச்னைகளை நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்’ என்றும் கூறியிருக்கிறார்கள். இதனால், ‘சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்வதா.. வேண்டாமா..?’ என ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார் ஓ.பி.எஸ்” என்றனர் விரிவாக.
அ.தி.மு.க-விலிருந்து ஓ.பி.எஸ்., மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் நீக்கப்பட்ட நிலையில், அவர்கள் சுயேச்சை எம்.எல்.ஏ-க்களாகவே கருதப்படுகிறார்கள். அ.தி.மு.க கொறடாவின் உத்தரவு அவர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். “அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, மன்றத்திற்குள் எடப்பாடிக்கு எதிரான காய்நகர்த்தலை ஓ.பி.எஸ் மேற்கொள்ள வேண்டும். அ.தி.மு.க-விற்குள் எடப்பாடிக்கு எதிரான மனநிலை துளிர்விட்டிருக்கும் நிலையில், மன்ற நடவடிக்கைகளை ஓ.பி.எஸ் புறக்கணிப்பது சரியல்ல…” என்பதே அவரது ஆதரவாளர்கள் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.
என்ன முடிவெடுக்கப் போகிறார் ஓ.பி.எஸ்?
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb