சட்டப்பேரவையில் குட்கா… உரிமை மீறல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி – அடுத்தகட்டம் என்ன?!| How is Stalin’s government going to implement the High Court order in the Assembly Gutka case?

நீதிமன்றத் தீர்ப்பு..!

விசாரணையில், “உரிமை மீறல் போன்ற நடவடிக்கைகள் எப்படிக் காலாவதியாகும்…” என்று பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூலை 31-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்திருந்தனர் நீதிபதிகள். அதில், “உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை ரத்துசெய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்துசெய்யப்படுகிறது. பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றது தொடர்பாக உரிமைக்குழு எதிர் மனுதாரர்கள் 18 உறுப்பினர்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் மீது விசாரணை நடத்த வேண்டும். மேலும், உறுப்பினர்கள் அனைவரும் உரிமைக்குழுவினரிடம் உரிய பதிலளிக்க வேண்டும். சட்டமன்ற விதிகளைப் பின்பற்றி உரிமைக்குழு விசாரணை நடத்தி, தகுந்த முடிவை எடுக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

சென்னை உயர் நீதிமன்றம்சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

நீதிமன்ற உத்தரவை அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து சட்டமன்ற அலுவலர்கள் சிலரிடம் பேசினோம். “நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்வதும், செல்லாததும் சபாநாயகரின் முடிவு. அது சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இதில் இரண்டு வகையான நடவடிக்கைகளுக்கு வாய்ப்பிருக்கிறது. ஒன்று, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கவும் முடியும். மற்றொன்று, சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து விசாரணை செய்வது. அதில், அந்த நபர்களின் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் கொடுக்க முடியும். விசாரணை முடிந்து, `இதில் ஒன்றுமில்லை’ என்று சொல்லவும் வாய்ப்பிருக்கிறது. அதேசமயத்தில் உரிமைக்குழுவில் அதிமுக உறுப்பினர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள். அதனால் விசாரணை சமயத்தில் அதிமுக தரப்பு குடைச்சல் கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. சட்டமன்ற நடவடிக்கை என்பது சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அதிமுக அழுத்தம் கொடுத்தாலும், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் சபாநாயகரின் கையிலேயே இருக்கிறது” என்றார்கள்.

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *