“எல்லோரையும் பேச அனுமதிப்பார்கள் என நினைத்தால் அஞ்சுகம் பூபதி, எஸ்.கே.பி.கருணா, கோகுல் என மூவரை மட்டுமே பேச அனுமதித்தார்கள். அவர்களும் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டிப் பேசாமல், ‘இந்த வாய்ப்பு கொடுத்த தலைமைக்கும், உழைப்பை அங்கீகரித்து விருந்து கொடுத்து தலைமைக்கும் நன்றி’ என முடித்துக்கொண்டார்கள். எல்லோருக்கும் உதயநிதியைப் பார்ப்பதே பெரிய விஷயமாக இருக்கும்போது எப்போதுதான் புகார்களைச் சொல்வார்கள்?
அதுமட்டுமல்ல, வாகனங்களை நிறுத்தவும், உள்ளே நுழைவதற்கும் முறையாக ஏற்பாடு செய்யவில்லை. குறிஞ்சி இல்லத்தைச் சுற்றிலும் வாகனங்களை நிறுத்தியிருந்தோம். சிலர் எடப்பாடி வீட்டின் அருகில் இருக்கும் காலியிடத்தில் வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள்” என்றனர் சில பொறுப்பாளர்கள்.
வெளியே நின்ற சில நிர்வாகிகளோ, “பொறுப்பாளர்கள் மட்டும்தான் இந்தத் தேர்தல் வெற்றிக்குக் காரணமா… அப்போ நாங்களெல்லாம் தேர்தல் வேலையே செய்யவில்லையா… எங்களையும் உள்ளே விட வேண்டும்” எனச் சிலர் குறிஞ்சி இல்ல வாசலில் போலீஸாருடன் முட்டி மோதிக்கொண்டிருந்தனர்.
மேலும், “இந்த நிகழ்ச்சியை அறிவாலயத்தில் நடத்தியிருந்தால், எங்களுக்கும் கட்சிரீதியில் கூடுதலாக அங்கீகாரம் கிடைத்திருக்கும்” எனச் சில புலம்பல்களும் கேட்டன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88