சட்டமன்றத் தேர்தலில் அதை மீட்டெடுத்துவிட முடியும். மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும்”‘ என்று குறிப்பிட்டார்.
அமித் ஷாவின் கருத்து குறித்து தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) செய்தித் தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ, “நாட்டில் ஊழலை சட்டபூர்வமாக்கியது பா.ஜ.க-தான். அரசியல்வாதிகளை, பா.ஜ.க-வினர் ஊழல்வாதிகள் என்று சொல்வார்கள். அதே தலைவர்கள் பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டால், அவர்களுக்கு நற்சான்று கொடுக்கப்பட்டுவிடுகிறது. பா.ஜ.க ஒரு வாஷிங் மெஷின்” என்றார்.
இது குறித்து சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, ”இதே பா.ஜ.க-தான் பாராமதியில் சரத் பவாரைப் பாராட்டிப் பேசியது” என்று தெரிவித்தார்.