நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் பா.ஜ.க-வின் நட்சத்திர பேச்சாளரும், அஸ்ஸாம் மாநில முதல்வருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வருகிறார். சமீபத்திய அவருடைய பிரசாரத்தில், `பா.ஜ.க ஆட்சியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது போல வாரணாசியில் மசூதி உள்ள இடத்தில் பாபா விஸ்வநாத் கோயில் கட்டப்படும். கடந்த முறை 300 இடங்களை பெற்றோம். அதனால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டினோம்.
அடுத்து இந்த முறை 400 இடங்களை வென்று, உ.பி மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமி இடத்தில் கிருஷ்ணர் கோயிலும், பிறகு வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதிக்கு பதிலாக பாபா விஸ்வநாத் இந்து கோயிலும் கட்டப்படும். முஸ்லிம் சமூகத்தின் பெரும் பகுதியினரை இந்து வெறுப்பாளர்களிலிருந்து இந்துக்களுடன் இணைந்து வாழக்கூடியவர்களாக மாற்றியுள்ளேன்… அதனால் லவ் ஜிகாத், நில அபகரிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளன. அஸ்ஸாமை முன்மாதிரி மாநிலமாக மாற்றியிருக்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
இந்த நிலையில், தனியார் செய்திக்கு அளித்த பேட்டியில்,“நாட்டில் உள்ள இந்துக்கள் சிலருக்கு இஸ்லாமோஃபோபியா (இஸ்லாமிய வெறுப்பு இருப்பது) உண்மை. மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் என்று அழைக்கப்படுபவர்களால் அதை எதிர்கொள்ள முடியாது. முஸ்லிம்களால் மட்டுமே அதை கட்டுப்படுத்த முடியும். மோடி காசி வழித்தடத்தை நிர்மாணிப்பதால், அனைவரும் அங்கு செல்கிறார்கள். காசிக்குப் போன இந்து, ஞானவாபி மசூதியைப் பார்க்கிறார். மசூதி தொடர்பாக கேள்விகளைக் கேட்கிறார்கள்.
அதன் விவரங்களை கேட்டு கோபமாக திரும்பி வருகிறார்கள். மதுராவில் ஷாஹி ஈத்கா அதே இடத்தில் தொடர்ந்து இருந்தால். அங்கு வரும் இந்துக்கள் இயல்பாகவே கோபமடைவார்கள்… முஸ்லிம்கள் அந்த ஷாஹி ஈத்காவை வேறு இடத்திற்கு மாற்றட்டும். அதன்பிறகு மதுராவுக்கு வரும் இந்து முஸ்லீம் சமூகத்தின் மீது நன்றியுடன் இருப்பார். இந்த இடமாற்றம் பலத்தால் நடத்த முடியாது.
ஆனால் பலவந்தமாக மஸ்ஜிதை வேறு இடத்திற்கு மாற்றாமல், இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு இடையேயான ஆலோசனையின் மூலம் மட்டுமே நடக்கும். எனவே மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் என்று அழைக்கப்படுபவர்கள், இந்துக்களை விமர்சிப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவில் இஸ்லாமோஃபோபியாவை கட்டுப்படுத்த முடியாது.” என சர்ச்சை கருத்தை தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88