சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் பொன்னையா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சுதந்திர தினத்தன்று காலை 11மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இடம், நேரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய பொருட்கள் குறித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தூய்மையான குடிநீர் விநியோகம், இணைய வழி வரி செலுத்தும் சேவை, இணைய வழி மனை பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழ் அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்க அறிவுறுத்தல்.

மேலும், சுயசான்று கட்டிட அனுமதி பெறுவதற்கான செயல்முறைகள், தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம் உள்ளிட்டவை தொடர்பாகவும்

விளம்பரம்

இதையும் படிங்க: வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் – எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு பொது கட்டடங்கள் அனைத்திலும் குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *