கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் சலீம் குமார். இவர் நகைச்சுவை வேடங்களில் அதிகமாக நடித்துள்ளார். வில்லன் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சலீம் குமார் அடிக்கடி அரசியல் குறித்து பதிவுகளை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது உண்டு. தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுவின் புகைப்படங்கள் மற்றும் சினிமா வசனங்களுடன் மீம்ஸ் உருவாக்குவது போன்று, கேரள மாநிலத்தில் நடிகர் சலீம் குமார் புகைப்படம் மற்றும் அவரது சினிமா டயலாக்குககைக் கொண்டு நெட்டிசன்கள் மீம்ஸ் உருவாக்குவது வழக்கம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க-வின் சுரேஷ் கோபி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து அந்த சமயத்தில் நடிகர் சலீம் குமார் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். நடிகர் சுரேஷ் கோபியின் புகைப்படத்துடன் வெளியிட்ட அந்த பதிவில், “அரசியல் ரீதியாக வேறுபாடு இருந்தாலும், தனிப்பட்ட முறையில் உங்கள் வெற்றியில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துகள் சுரேஷ் கோபி சகோதரா…” என குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே நடிகர் சுரேஷ் கோபி திருச்சூரில் வெற்றிபெற்றதற்கு எதிராக சில கருத்துக்களை நடிகர் சலீம் குமார் பெயரில் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன. இது அரசியல் ரீதியாக சர்ச்சையை கிளப்பியது.
அந்த பதிவு போலியானது என நடிகர் சலீம் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து எர்ணாகுளம் வடக்கேகரா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கேரள போலீஸின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “சினிமா நடிகர் சலீம் குமார் பெயரில் போலியாக போஸ்ட் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களுக்கு எதிராக எர்ணாகுளம் ரூரல் வடக்கேகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாராணை நடைபெற்று வருகிறது. போலி செய்திகளை உருவாக்குவதும், அதை சமூக வலைத்தளங்களில் பகிர்வதும் குற்றமாகும். அப்படி செய்பவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகர் சலீம் குமார் கூகையில், “எனது சகோதரனைப் போன்ற சுரேஷ் கோபியை அவமானப்படுத்தும் விதமாக போலி பதிவுகள் சமூக வலைத்தளங்களின் பரப்பப்பட்டு வருகின்றன. எனக்கும் அந்த பதிவுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. மீம்கள் உள்ளிட பல விஷயங்களில் ட்ரோல் செய்பவர்கள் எனது போட்டோ பயன்படுத்திவருகின்றனர். அதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், மற்றொருவர் மீது தனிப்பட்ட முறையில் கீழ்த்தரமாக விமர்சிக்கும் பதிவில் என்னை இணைக்க வேண்டாம் என தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88