நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “மதுரவாயல்-துறைமுகம் டபுள் டெக்கர் பறக்கும் சாலை திட்டத்துக்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூவம் ஆற்றில் கட்டடக் கழிவுகளை கொட்டியுள்ளது. இந்தக் கட்டடக் கழிவுகளை செப்டம்பர் மாதத்துக்குள் அகற்றப்படும். அதேசமயம் மாம்பலம் கால்வாய், ஒட்டேரி நல்லா கல்வாய்களில் உள்ள துளைகளை அடைக்க வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாசர்பாடி, கணேஷ்புரம் சுரங்கப்பாதை தண்ணீர் தேங்கும் பகுதியாக உள்ளது. ரயில்வே துறையின் பணிகளால் இந்தச் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குகிறது. விரைவில் இது சரிசெய்யப்படும்.