சேலம்: கலைஞர், எம்.ஜி.ஆர் தங்கிய பங்களாவும்.. `பாழாகும்’ பனமரத்துப்பட்டி ஏரியும்! – சீரமைக்கப்படுமா? | salem local people urging officials to renovate panamarathupatti bungalow and lake

கலைஞர்- எம்.ஜி.ஆர் தங்கிய பங்களா!கலைஞர்- எம்.ஜி.ஆர் தங்கிய பங்களா!

கலைஞர்- எம்.ஜி.ஆர் தங்கிய பங்களா!

இது தொடர்பாக பனமரத்துப்பட்டி ஏரி பாதுகாவலர் சரவணனிடம் பேசினோம், “எனது தாதா, தந்தை என தலைமுறை தலைமுறையாக இதே ஊரில் தான் குடியிருந்து வருகிறோம். தாத்தா, தந்தை இருவருமே  ஏரி பாதுகாவலராகத்தான் பணியாற்றினார்கள். எனக்கு விவரம் தெரிந்து கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோர் இந்த டி.பி பங்களாவில் தங்கி, கதை எழுதியுள்ளார்கள். மேலும், ஒரு முறை கதை எழுதி பனமரத்துப்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் நாடகம் நடித்து அதில் கிடைத்த பணத்தை, பள்ளிக் கட்டடம் கட்ட நிதியுதவி அளித்துவிட்டுச் சென்றனர். இன்றளவும் கலைஞரும், எம்.ஜி.ஆரும் சேர்ந்து கட்டிய பள்ளிக்கூடம் என்கிற பெருமை சந்தைப்பேட்டை அரசுப் பள்ளிக்கு இருந்து வருகிறது. அப்படிப்பட்ட பெரும் தலைவர்கள் தங்கி கதை, வசனம் எழுதிய பங்களா இன்று கேட்பாறற்று கிடக்கிறது. இதை சீரமைத்து நினைவுச்சின்னமாக வைத்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

இது தொடர்பாக மேயர் ராமச்சந்திரனிடம் பேசியபோது, “நீங்கள் சொல்லித்தான் நான் கேள்விப் படுறேன். இது தொடர்பாக தகவலை பெற்றுக்கொண்டு அதற்கு என்ன செய்யமுடியும் என்பதை கூறுகிறேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *