ஜெகத்ரட்சகன் : திமுக எம்.பி-க்கு ரூ.908 கோடி அபராதம் விதித்த அமலாக்கத்துறை! | A fine of Rs 908 crore has been imposed on dmk MP jagathratchagan

கடந்த 2020-ம் ஆண்டு முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தி.மு.க எம்.பி-யுமான ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில், சட்ட விரோதப் பணப் பறிமாற்றம் தொடர்பான புகாரில், அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அதில், ரூ.89.19 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இதற்கிடையில், ஜெகத்ரட்சகனின் கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்கள் மூலம் சம்பாதித்த வருவாய்க்கு உரிய வரி செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.

ஜெகத்ரட்சகன்ஜெகத்ரட்சகன்

ஜெகத்ரட்சகன்

அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு, அவருக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில்தான் அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தன் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் தகவல் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக விரிவான அறிக்கையும் அமலாக்கத்துறை தரப்பிலிருந்து வெளியாகியிருக்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *