பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். வெற்றிபெற்ற அனைத்து எம்.பி.க்களுக்கும் டெல்லியில் குடியிருப்புகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் அவை உடனடியாக வழங்கப்படாது. எனவே தற்காலிகமாக எம்.பி.க்கள்தான் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். டெல்லியில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக விருந்தினர் மாளிகை இருக்கிறது. அந்த விருந்தினர் மாளிகையில் அந்த அந்த மாநில எம்.பி.க்கள் தற்காலிகமாக தங்கிக்கொள்வார்கள். இது தவிர சம்பந்தப்பட்ட மாநிலத்தில் இருந்து டெல்லி வரும் அமைச்சர்களும் அந்த விருந்தினர் மாளிகையில் தங்குவது வழக்கம்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து வெற்றி இருந்தாலும், டெல்லியில் உள்ள மகாராஷ்டிரா சதன் விருந்தினர் மாளிகையில் தனக்கு தற்காலிக குடியிருப்பு கொடுக்கவேண்டும் என்று கேட்டுள்ளாராம். அதுவும் மகாராஷ்டிரா சதனில் முதல்வர் தங்கும் அறையை தனக்கு ஒதுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது இது மகாராஷ்டிரா அரசியல் தலைவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சிவசேனா(உத்தவ்) எம்.பி சஞ்சய் ராவத், “கங்கனா ரனாவத்திற்கு ஜனாதிபதி மாளிகையில் பெரிய அறை ஒதுக்கவேண்டும். அல்லது பிரதமரிடம் அவரது வீட்டில் தங்க அனுமதிக்கவேண்டும் என்று கேட்கலாம். கங்கனா ரனாவத் பெரிய நடிகை. இப்போது எம்.பி.யாகிவிட்டார். மகாராஷ்டிராவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் மகாராஷ்டிரா சதனில் தங்குவார்கள். கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே இமாச்சல பிரதேச பவனில்தான் அவர் தங்கவேண்டும். இமாச்சல பிரதேச முதல்வர் தனது அறையை கங்கனாவிற்கு கொடுப்பதாக இருந்தால் கொடுக்கலாம். மகாராஷ்டிரா முதல்வர் ஏன் கொடுக்கவேண்டும்”‘ என்று கேட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88