ட்ரம்பை கொல்ல சதி: “த்ரில்லர் படம் போல விரிவான சதித்திட்டம்..!” – பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கைது| Pakistani citizen has been charged in plot like a spy thriller to assassinate Trump.

இந்த நிலையில்தான், டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிஃப் மெர்ச்சண்ட் என்பவரை அமெரிக்க ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ) அமைப்பு கைது செய்திருக்கிறது. இது தொடர்பாக எஃப்.பி.ஐ தலைவர் கிறிஸ்டோபர் வ்ரே, “குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பைக் கொல்ல உளவுத் திரில்லர் திரைப்படத்தைப் போன்ற விரிவான சதித்திட்டத்தில் ஒருவர் ஈடுபட்டிருக்கிறார்.

ஆசிஃப் மெர்ச்சண்ட்ஆசிஃப் மெர்ச்சண்ட்

ஆசிஃப் மெர்ச்சண்ட்

தற்போது அம்பலப்படுத்தப்பட்ட இந்த கொலை சதி, ஈரானுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட ஒரு பாகிஸ்தானியரால் திட்டமிடப்பட்டது. 2020-ம் ஆண்டு ஈராக்கில், ஈரான் குட்ஸ் படையின் தளபதி காசிம் சுலைமானியை ட்ரோன் தாக்குதல் மூலம் படுகொலை செய்ய, அப்போதைய அதிபராக இருந்த ட்ரம்ப் உத்தரவிட்டதிலிருந்து, அமெரிக்கவின் அதிகாரிகளை கொன்று பதிலடி கொடுக்க வேண்டும் என ஈரான் திட்டமிட்டு வருகிறது. ஈரானின் இந்த இடைவிடாத முயற்சிகளை தீவிர நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன் நடந்த கொலை முயற்சிக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாக எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.” எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *