`தன் தோல்விக்கு தானே வித்திட்ட வேட்பாளர்’ – அயோத்தியை உள்ளடக்கிய தொகுதியில் பாஜக தோற்றது எப்படி? | BJP candidate who defeated in Ayodhya claims to change constitution

அதன் பிறகு அம்பேத்கர் ஜெயந்தியன்று லல்லுசிங் மில்கிபூர் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும் போது, `புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தில் பா.ஜ.க-வுக்கு 3ல் இரண்டு பங்கு ஆதரவு தேவை. நாடாளுமன்றத்தில் பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை இருந்தாலும் புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தில் 3-ல் இரண்டு பங்கு எம்.பி.க்களின் ஆதரவு தேவை’ என்று பேசி புதிய சர்ச்சையை கிளப்பினார்.

இதனால் பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்பு சட்டத்தை மாற்றும் திட்டம் இல்லை என்று விளக்கம் கொடுத்தார். அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பிறந்த நாளில் அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று லல்லு சிங் பேசியது பா.ஜ.கவிற்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. அதுவே லல்லு சிங் தோல்விக்கும் காரணமாக அமைந்துவிட்டது.

அயோத்தி ராமர் கோயில்அயோத்தி ராமர் கோயில்

அயோத்தி ராமர் கோயில்

பைசாபாத்தில் 21 சதவீதம் பட்டியலின மக்கள் வசிக்கின்றர். அவர்கள் ஒட்டுமொத்தமாக லல்லு சிங்கிற்கு எதிராக வாக்களித்தது லல்லுவின் தோல்வியை உறுதி செய்தனர். பிரச்னை பெரிதான பிறகு வாய் தவறி சொல்லிவிட்டேன் என்றும், அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து மட்டுமே பேசினேன் என்று குறிப்பிட்டார். ஆனால் அவரது விளக்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ள லல்லு சிங் மூன்றாவது முறையாக மக்களவைக்கு செல்லும் வாய்ப்பை தானே கெடுத்துக்கொண்டார்.

அகிலேஷ் யாதவ் திட்டமிட்டு பட்டியலின வேட்பாளரை நிறுத்தி கிராமங்களில் அதிக அளவில் கவனம் செலுத்தி வெற்றியை அறுவடை செய்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை மட்டும் நம்பி லல்லு சிங் தேர்தலில் நின்றார். பெரிய அளவில் வாக்காளர்களை சந்திக்காமல் இருந்தார். அதற்கு மக்கள் சரியான பரிசு கொடுத்துள்ளனர்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *