தமிழகத்தில் நிதியின்றி திணறும் பல்கலைக்கழகங்கள்? – தி.மு.க அரசுக்கு மற்றொரு பின்னடைவா? | Universities in Tamil Nadu that are stuck without funds?

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர் கவிஞர் சல்மா, “கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் பல பல்கலைக்கழகங்களில் பணம் வாங்கிக்கொண்டுதான் துணை வேந்தர்களை நியமித்தார்கள் என்கிற பெரிய சர்ச்சை இருக்கிறது. அவ்வாறு பணம் கொடுத்து வந்த துணை வேந்தர்கள் தங்கள் செலவு செய்த பணத்தை எடுக்க பல்கலைக்கழகங்களின் நிதியை சூறையாடினார்கள். இதனால்தான் பல்கலைகளில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பிரச்னைகளை சரிசெய்வதற்கு தி.மு.க கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. தலைவர் தளபதி ஸ்டாலின் கல்வித்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதற்காகவே பிற துறைகளைவிட கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று வருகிறார்.

திமுக செய்தி தொடர்பாளர் கவிஞர் சல்மாதிமுக செய்தி தொடர்பாளர் கவிஞர் சல்மா

திமுக செய்தி தொடர்பாளர் கவிஞர் சல்மா

அ.தி.மு.க-வினர் செய்த தவறை, தி.மு.க தலையில் போடும் வேலையைதான் தற்போது எடப்பாடி செய்கிறார். கடந்த 10 ஆண்டுகாலம் என்ன செய்தோம் என்பதை மறந்துவிட்டு எடப்பாடி பேசிக்கொண்டு இருக்கிறார். கல்வித்துறையில் எங்களுக்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே ஆளுநர் ரவியை இங்கு வைத்திருக்கிறார்கள். நிர்வாகத்துக்குள் குடைச்சல் கொடுக்க ஆளுநர் ரவி இருக்கிறார். ஏற்கெனவே பிரச்னையை ஏற்படுத்திவிட்டு சென்ற எடப்பாடி இன்று இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். அ.தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட சீர்கேட்டை போக்குவதற்கு மூன்று ஆண்டுகள் போதுமானதாக இல்லை. அந்த அளவுக்கு செய்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக மாணவர்களின் நலனுக்காக போராடி வருகிறோம்” என்றார்.

`இவர்களின் அரசியல் விளையாட்டில் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருந்தால் சரி!’ என்கிறார்கள் கல்வியாளர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *