எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு குறித்து திமுகவின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் சிவ ஜெயராஜிடம் பேசினோம். “சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்துப் பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை. அதிமுக ஆட்சி நடந்த சமயத்தில்தான் அவரின் கட்சி தலைவரான ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாட்டில் கொலையும், கொள்ளையும் நடந்தது. அவரின் ஆட்சியில்தான் தூத்துக்குடியில் தமிழர்கள் 13 பேர் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இப்படி எத்தனையோ செயல்களைச் செய்துவிட்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசுகிறார் எடப்பாடி. போகிற போக்கில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்வது திமுக அரசின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி மட்டுமே. கடந்த பத்து ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைத் தெருவெங்கும் ஆறாக ஓடவிட்டார்கள்.
அதிமுக ஆட்சிக்காலத்தில், அதுவும் குறிப்பாக எடப்பாடியின் ஆட்சிக்காலத்தில்தான் திருட்டு தொடங்கித் தொடர் குற்றங்கள் வரை அதிகரித்தது. எங்கள் ஆட்சி பொறுப்பேற்றதும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தினர். குற்றங்களைக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த கொலை சம்பவத்துக்கும் தற்போது நடக்கும் எண்ணிக்கைக்கும் பெரும் எண்ணிக்கை வித்தியாசம் இருக்கிறது. அந்த குற்றங்களைக் கூட தடுப்பதற்கு பல்வேறு சிறப்பு முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கிறது இந்த திராவிட மாடல் அரசு. குறிப்பாக நெல்லை போன்ற மாவட்டங்களில் நடக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொலை தொடங்கி குற்றங்கள் வரை குறைந்துகொண்டே வருகிறது என்பதே எதார்த்த நிலைமை” என்றார் விரிவாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb