கோவை, வேலூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களின் எஸ்.பி.க்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 56 காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சென்னை நுண்ணறிவு பிரிவில் ஏற்கனவே துணை ஆணையராக ராமமூர்த்தி உள்ள நிலையில், சக்தி கணேசன் மற்றொரு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை தெற்கு எஸ்பியாக இருந்த சுஜித் சென்னை துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நிஷா, நீலகிரி எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக செல்வநாகரத்தினமும் மயிலாப்பூர் காவல் துணை ஆணையராக ஹரிஹரன் பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாக இருந்த ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல், திருவண்ணாமலை எஸ்பியாக இருந்த கார்த்திகேயன், கோவைக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தாம்பரம் காவல் ஆணையரகத்தில் துணை ஆணையராக இருந்த கவுதம் கோயல், சேலம் மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் எஸ்பியாக இருந்த அருண் கபிலன், நாகை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். விருதுநகர் எஸ்பியாக இருந்த பெரோஸ் கான், கரூர் எஸ்பியாகவும், விருதுநகர் எஸ்பியாக கண்ணனும், மயிலாடுதுறை எஸ்பியாக ஜி.ஸ்டாலினும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை எஸ்பியாக பிரபாகரும் தருமபுரி மாவட்ட எஸ்பியாக மகேஸ்வரனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்ட எஸ்பியாக சீனிவாசனையும், வேலூர் மாவட்ட எஸ்பியாக மதிவாணனையும் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை தியாகராய நகர் மற்றும் புளியந்தோப்பு காவல் துணை ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக பத்ரி நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு காவல் கண்காணிப்பாளராக விஜயா கார்த்திக்ராஜ் நியமனம். மாநில மனித உரிமைகள் ஆணையரக காவல் கண்காணிப்பாளராக ஜெயலட்சுமி ஐபிஎஸ் நியமனம். ஈரோடு சிறப்பு அதிரைப்படை காவல் கண்காணிப்பாளராக சசி மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பூந்தமல்லி 13வது பெட்டாலியன் காவல் கண்காணிப்பாளராக தீபா சத்யன் நியமனம். சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
.